முகப்பு
கண்ணோட்டம்

அந்த நாள் நாடகம் ஞாபகம் வந்ததே..!

நாடகப் பித்தர் அமரர் "ராது'வின் நினைவாக ஐந்து பழைய பிரபல நாடகங்களை மேடையேற்றியது கிருஷ்ண கான சபா. இருபத்து ஐந்து வருடங்களுக்கு முந்தைய நாடகங்களை மீண்டும் ரசிகர்களுக்கு வழங்க வேண்டும் என்ற எண்ணம் அவர்க

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:19 PM
பகிர்:

நாடகப் பித்தர் அமரர் "ராது'வின் நினைவாக ஐந்து பழைய பிரபல நாடகங்களை மேடையேற்றியது கிருஷ்ண கான சபா. இருபத்து ஐந்து வருடங்களுக்கு முந்தைய நாடகங்களை மீண்டும் ரசிகர்களுக்கு வழங்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு இருந்தபோதும், அத்தனை பழைய குழுக்கள் சில பற்பல காரணங்களால் மேடையேற முடியாமல் போய்விட்டதாம். இருந்தாலும் சாவியின் "வாஷிங்டனில் திருமணம்' மாப்பிள்ளை கணேஷின் "கிருஷ்ண ஜெயந்தி' கோமலின் "தண்ணீர் தண்ணீர்' குருகுலம் பாய்ஸின் "கடவுள் வந்திருந்தார்' வெங்கட்டின் "காசேதான் கணவனடா' அனந்துவின் "கண்ணுல காச     

காட்டப்பா' என்று  சீரியஸ் கொஞ்சம் சிரிப்பு கொஞ்சமுமாக ராதுவுக்கு நாடக அஞ்சலி செலுத்தினார்கள். நாடகமே மூச்சு, நாடகமே பேச்சு என்று வாழ்ந்த ராதுவுக்கு இதுதான் சரியான அஞ்சலி.

"கடவுள் வந்திருந்தார்' சுஜாதாவின் அறிவியல் நாடகம். ஆனால் ஒரேயடியாக விஞ்ஞானத்தை  மட்டுமே வைத்துக்கொண்டு ரசிகரை இம்சை  செய்யாமல், நகைச்சுவையை அங்கங்கே முந்திரிப் பருப்பாகத் தூவியிருக்கிறார் சுஜாதா. சீனிவாசன் என்கிற குடும்பத் தலைவர் ஒரு விஞ்ஞானக் கதையைப் படிக்கத் தொடங்குகிறார். அதில் வருங்கால மனிதன் பற்றியும் படிக்கிறார். அப்படி ஓர் ஆள் வந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்தாரோ இல்லையோ, நெற்றியில் வெள்ளை பல்பு மின்ன ஒரு வருங்கால மனிதன் வந்தேவிடுகிறான்! நல்ல வேளையோ, கெட்ட வேளையோ, அவன் சீனிவாசன் கண்களுக்கு மட்டுமே தெரிகிறான். இது போதாதா நகைச்சுவை வாய்ப்புக்கு?

சீனிவாசனும் வருங்கால மனிதனும் அடிக்கிற லூட்டியே மீதி நாடகம். மாடி இளைஞர் சுந்தர் செய்கிற "செட்-அப்' சமாசாரம்தான் கடைசியில் சீனிவாசனைக் காப்பாற்றுகிறது.

ஆமாம். அவர் இது அறிவியல் சமாசாரம் என்றபோது யாரும் அவரை லட்சியம் செய்யவில்லை. அவர் இயல்பாகச் செய்வதை தெய்வீக சக்தி என்று நம்பி காலில் விழுந்து கும்பிடத் தொடங்கிவிடுகிறார்கள்! சபா நாடகம் என்றாலும், சுஜாதா "டச்' இருந்தால் அதன் தரம் சற்றுக் கூடித்தான் போகிறது. குருகுலம் பாய்ஸ் கம்பெனியின் எம்.பி.மூர்த்தி பூர்ணம் போலவே இயல்பாக (சீனிவாசனாக) நடித்தே கைதட்டல் பெற்றுவிடுகிறார். மனைவி லட்சுமியாக ஜெயந்தியும்,   வரப்போகும் நூற்றாண்டு மனிதனாக பல்தேவும், மகள் வசுமதியாக சாந்தி கணேஷ், டாக்டராக ரமேஷ் என்று ஒவ்வொருவருமே மிகையில்லாத நடிப்பை வழங்கினார்கள். ஒருமுறை "சுஜாதா ஞாபகம் வந்ததே' என்று அவருடைய ஒரு கொலை ஒரு பிரயாணம், டாக்டர் நரேந்திரன் வினோத வழக்கு, என்று சில நாடகங்களை அடுத்த ஆண்டு ராது நினைவாக வழங்கலாம் என யோசனை கூறுவேன்!

முழு கட்டுரையைப் படிக்க →