முகப்பு
கண்ணோட்டம்

இலவச அரிசி ஊட்டச் சத்து கொடுக்குமா?

சென்னை, ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி அரங்கத்தில் "பாதுகாப்பான உணவுக்கான கூட்டமைப்பின்' சார்பாக நடந்த விழிப்புணர்வு முகாமில், உணவுப் பாதுகாப்புக்கான உச்சநீதிமன்ற தேசிய ஆணையரின் ஊட்டச்சத்து ஆலோசகர் டாக்டர் வ

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:18 PM
பகிர்:

சென்னை, ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி அரங்கத்தில் "பாதுகாப்பான உணவுக்கான கூட்டமைப்பின்' சார்பாக நடந்த விழிப்புணர்வு முகாமில், உணவுப் பாதுகாப்புக்கான உச்சநீதிமன்ற தேசிய ஆணையரின் ஊட்டச்சத்து ஆலோசகர் டாக்டர் வீணா சத்ருக்னா, உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட தமிழ்நாட்டுக்கான ஆலோசகர் டாக்டர் சுரேஷ் ஆகியோர் உரையாற்றினர். அவர்களின் உரையிலிருந்து சில பகுதிகள்:

வீணா சத்ருக்னா

நம் நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பிருந்த சத்துணவு நிபுணர்கள், சராசரியாக மனிதர்கள் தங்களின் அன்றாட வேலைகளைக் கவனிப்பதற்கு உணவில் 2400 கலோரி இருந்தால் போதும் என்று முடிவெடுத்தனர். இந்த முடிவை, அந்தக் காலத்தில் நமது பாரம்பரியமான திணை, சாமை போன்ற சிறு தானியங்களை உண்பவர்களைக் கணக்கில் எடுக்காமல் எடுத்திருக்கின்றனர். இதன் விளைவாக சுதந்திரத்திற்குப் பின் நம்முடைய நாட்டில் உணவு தானியங்களின் உற்பத்தியைப் பெருக்கவேண்டும் என்று நினைத்த அளவுக்கு சிறு தானியங்களின் உற்பத்தியைப் பெருக்க வேண்டும் என்று அரசு நினைக்கவில்லை.

இதனால் நாட்டில் புரதச் சத்துக் குறைபாடுள்ள மக்களின் எண்ணிக்கை படுவேகமாக அதிகரித்து வருகிறது.

புரதக் குறைப்பாட்டால் சராசரியை விட ஆண்கள் 12 செ.மீ. உயரம் குறைந்தவர்களாக இருக்கிறார்கள். பெண்கள் சராசரியை விட 11 செ.மீ. உயரம் குறைந்து காணப்படுகிறார்கள். சராசரியை விட ஆண்கள் 16 கி.கி. உடல் எடை குறைந்து காணப்படுகிறார்கள். பெண்கள் 11 கி.கி. உடல் எடை குறைந்து காணப்படுகிறார்கள். ஏறத்தாழ இதே புள்ளிவிவரம்தான் கடந்த 35 வருடங்களாக நடைமுறையில் இருக்கிறது.

உயரத்திற்குத் தகுந்த எடையைக் குறிக்கும் பிஎம்ஐ அளவீட்டின்படி 18.5-க்குக் குறைவான பிஎம்ஐ அளவு இருந்தால் அவர்கள் சத்துக் குறைபாடு உள்ளவர்கள். இந்தியாவின் மக்கள் தொகையில் 40 சதவீதம் பேர் இப்படித்தான் இருக்கிறார்கள்.

இந்த நிலையை மாற்றுவதற்கு மத்திய, மாநில அரசுகளுக்குச் சில கோரிக்கைகளை வைத்திருக்கிறோம். சைவ உணவுகளிலிருந்து 60 முதல் 70 சதவீத அளவுக்குத்தான் புரோட்டினை மனித உடல் கிரகித்துக் கொள்கிறது. ஆனால் இறைச்சி, பால், முட்டை போன்றவற்றிலிருந்து 100 சதவீத புரோட்டினை மனித உடல் கிரகித்துக் கொள்கிறது. எனவே அங்கன்வாடி, அரசு காப்பகங்கள், பள்ளிகள் போன்றவற்றிற்கு இத்தகைய உணவுகளை வழங்கலாம். இதனால் ஆரோக்கியமான எதிர்காலத் தலைமுறைக்கு உத்தரவாதம் கிடைக்கும்.

இலவச அரிசியால் பசி போகும். ஊட்டச்சத்து கிடைக்குமா? கிடைக்காது. அதனால் பால், எண்ணெய், பருப்பு வகைகளையும் அரசு ஏழைகளுக்கு இலவசமாகக் கொடுக்க முன்வரவேண்டும். ஊட்டச் சத்து குறைபாடால் தாயை விட மகளின் உயரம் குறைந்து வருவது அதிகரித்து வருகிறது.

டாக்டர் சுரேஷ்

வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்களை அடையாளம் காண்பதற்குத் தனிமனிதனின் ஒருநாள் வருமானம் ரூபாய் 20 என்று அரசு நிர்ணயித்திருக்கிறது. நாட்டில் வறுமையில் உள்ள மக்களைக் குறித்த தவறான புள்ளி விவரத்தை ஏற்படுத்தவே இது உதவும். வறுமைக் கோட்டை நிர்ணயிப்பதற்கான இந்த வருமான வரம்பை அரசு மாற்றியமைக்கவேண்டும்.

முழு கட்டுரையைப் படிக்க →