முகப்பு
கண்ணோட்டம்

எனது குருபீடம்

சென்னையில் அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் நடத்திய ஒüவை சண்முகம் நூற்றாண்டு விழாவில் தமிழ் திரைப்பட இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் பேசினார். அதிலிருந்து... ""டி.கே.எஸ். சகோதரர்களின் நாடக சபைத

Updated On : 20 செப்டம்பர், 2012 at 4:22 AM
பகிர்:
Updated On : 2 ஜனவரி, 2024 at 10:32 PM

சென்னையில் அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் நடத்திய ஒüவை சண்முகம் நூற்றாண்டு விழாவில் தமிழ் திரைப்பட இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் பேசினார். அதிலிருந்து...

""டி.கே.எஸ். சகோதரர்களின் நாடக சபைதான் எனது குருபீடம். என் சொந்த ஊர் காரைக்குடி. காரைக்குடியில் டி.கே.எஸ்.நாடகக் குழுவினர் மாதக் கணக்கில் முகாமிட்டு நாடகங்கள் நடத்துவார்கள். ஒரு நாடகம் விடாமல் பார்ப்பேன். அதைப் பார்த்துத்தான் எனக்குக் கலை ஆர்வமே ஏற்பட்டது.

சினிமா உலக ஆசை வளர்ந்தது. என் தந்தையாரிடம் என்னைச் சினிமா உலகில் சேர்த்துவிடச் சொன்னேன். அவர் என்னை அழைத்துச் சென்று கண்ணதாசனிடம் அறிமுகப்படுத்தினார். கண்ணதாசன் தன் பத்திரிகை ஆபிசில்தான் வேலை போட்டுக் கொடுத்தாரே தவிர, சினிமாவில் சேர்த்துவிடவில்லை!

Advertisement

பத்திரிகை வேலைகள் எனக்கு அலுத்துப் போயின. அப்பாவை நச்சரித்தேன். என் நச்சரிப்புத் தாளாமல் ஏ.வி.மெய்யப்ப செட்டியாரிடம்

கூட்டிக் கொண்டு போனார்.

செட்டியார் என்னை எடிட்டிங் யூனிட்டில் சேர்த்துவிட்டார். படிப்படியாக வளர்ந்து இயக்குநர் ஆனேன்.

என் வாழ்வில் ஒரு சோதனைக் கட்டம் வந்தது. ரஜினி, ராகவேந்திர சுவாமிகளாக நடிக்க விரும்பினார். என்னையே அந்தப் படத்தை இயக்கித் தரச் சொன்னார்.

என் முன் மூன்று கேள்விகள்

எழுந்தன.

ஒன்று, மசாலா பட மன்னனான ரஜினியை மக்கள் சாந்த சொரூபியான ராகவேந்திர ஸ்வாமிகளாக ஏற்றுக் கொள்வார்களா?

இரண்டு, சுயமரியாதைக் குடும்பத்தைச் சார்ந்த நான் இந்தப் படத்தை இயக்கக் கூடுமா?

மூன்று, புராணப் படத்தை இயக்க எனக்கு முன் அனுபவம்தான் இருக்

கிறதா?

- இந்த மூன்று கேள்விகளையும் எனக்கு நானே கேட்டு, முடிவெடுக்க முடியாமல் தவித்தேன். ஆனால் ரஜினியும், கே.பாலசந்தர் சாரும் என்னை இந்தப் படத்தை இயக்கச் சொல்லி ஊக்குவித்தார்கள்.

படத்தை இயக்குவதற்கு முன் அனுபவம் பெற - புராணப் படத் திலகம் ஏ.பி.நாகராஜனின் படங்களைப் போட்டுப் பார்க்கத் தொடங்கினேன்.

ஏ.பி.நாகராஜனின் ஆழமும் அகலமும் என்னை வியப்பில் ஆழ்த்தின. "திருவிளையாடல்' படத்தில் அவர் தொட்டிருந்த சிகரங்கள்... "திருவருட் செல்வரில்' சிவாஜியை அவர் பயன்படுத்தி இருந்த பாங்கு எல்லாம் என்னைச் சிலிர்க்க வைத்தன. இவையெல்லாமாக என்னுள் நம்பிக்கையைத் தோற்றுவித்தன.

ராகவேந்திரா ஸ்வாமிகள் படத்தை வெற்றிகரமாக இயக்கி முடித்தேன். ஏ.பி.நாகராஜனும் டி.கே.எஸ். நாடக சபைக் கலைஞர்தான். முதலில் ஸ்த்ரீ பார்ட் போட்டு அப்புறம் ஆண் வேடங்கள் செய்தார்.

எனவே எனக்கு இந்த வகையிலும் குருபீடம் டி.கே.எஸ். சபைதான்'' என்றார் எஸ்.பி.எம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.