முகப்பு
கவிதைமணி

எதிர்கால கனவு: சாலை கிருஷ்ணமூர்த்தி நந்தகோபால்

Updated On : 24 ஆகஸ்ட், 2016 at 3:59 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:41 PM

இந்தியர்க்கு நல்ல எதிர்காலம் உண்டு 
சிந்தித்து நாமும் செயல்பட்டால் இந்தியாவும்  
வல்லர சாக வளத்தைப் பெருக்க 
கல்வியில் சிறக்க கலாம் 
சொன்னச் சூளுரை சூடுவோம் 
துன்பப் பட்டுத் துயரடையும் பாட்டாளி 
இன்னல் தீர்ப்போம் 
நீர்வளம் பெருக்குவோம் 
நீர்பாசன முறையால் நிலத்தைப் பயிர்செய்வோம் 
பச்சை நிலத்தைப் பறிகொடுக்கோம் 
இச்சைகொண்டு வேளாண்மை இனிதே செய்வோம்
பெண்களை நன்றாய்ப் பேணிக் 
கண்களாய் அவர்களைக் காப்போம் 
ஏவுகணை யாலே எதிரியை அச்சுறுத்தி
தாவுக் கணையால் தாக்குவோம் 
சாலைகள் பலவும் சமைப்போம் 
ஆலைகள் பலவும் அமைப்போம் 
இந்திய மக்களின் இத்திறம் காண 
சந்ததி முதலோர்த் தலைமை யேற்று 
நாட்டின் மேன்மை நலமடைய நல்லோர்
காட்டிய பாதையைக் கடப்போம் 
கிட்டியம் வைத்துக் காதில் குரல்பதிவு 
கேட்டு உடன்பலன் கிட்டிட 
திட்டத்தை முடிப்போம் 
எல்லாத் துறையிலும் ஈடுபட்டு 
நல்லரசாய் இந்தியா நிலைத்திட உழைப்போமே 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.