கவிதைமணி

எதிர்கால கனவு: கே. நடராஜன்

கவிதைமணி

குழந்தை பிறந்த நிமிடம் முதல் அம்மா அப்பாவுக்கு  கனவு
அவர் பிள்ளையின் எதிர்காலம் !
கனவு பல கண்டு வளரும் பிள்ளை உனக்கும்    அந்த  கனவுதான் 
அஸ்திவாரம் நீ  கட்டும் உன்  வாழ்க்கை வீட்டுக்கு ...உன் நாட்டுக்கு !
கனவு  பல  இருக்கலாம் ..ஆனால்  அது உன் தூக்கத்தில் 
வரும்  கனவு அல்ல தம்பி... உன்னை  தூங்க விடாமல் உன்னை 
துரத்தும்  உன் லட்சியக் கனவாக மட்டுமே இருக்கலாம்  தம்பி !
கனவிலும்  உன் சிந்தனை இருக்கலாம் ...சிந்தித்து சிந்தித்து 
உன் லட்சியம் எட்ட நீ  ஏறும் ஏணியாக உன் கனவு இருக்கலாம் !
முடியாத செயலை முடிக்க வேண்டும் என்று  கனவு இருக்கலாம் ! 
இதை  நான் சொல்லவில்லை  தம்பி !...அந்த மாமனிதன்
கலாம்  சொன்னது  உனக்கு !.. மறக்க வேண்டாம் நீ   அந்த 
மாமனிதனின்  மணி மொழி ! அவன் சொல் வழி நீ  நடந்து 
மாற்றிக் காட்டு உன் தாய் நாட்டை ஒரு புதிய பாரதமாக !
"இருபது இருபது ...பாரதம் ஒரு வல்லரசு" ...இதுவே உன் 
 கனவாகட்டும் ...உன் கனவு  நனவாகும் அந்த நாள் 
மாமனிதன் கலாம் கண்ட கனவும்  நனவாகும்  பொன்னாள் !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

SCROLL FOR NEXT