வான மழை நீ யெனக்கு: முத்து
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:42 PM
இதோ
எத்தனை
மழை இங்கு பொழிகிறது,
இரத்த மழை………
கண்ணீர் மழை……
பூவே
உன் கடிதம்
என் கைகளை ஸ்பரிசித்தபோது
இங்கு
வான் மழையல்லவா
பொழிந்தது!
ஓ……
தபால் கவருக்குள்
கடிதத்தோடு
மேகங்களையும்
வைத்து அனுப்பிவிட்டாயோ!!!