கவிதைமணி

பணத்தின் மறுபக்கம் : ஆர்.அருண்குமார்

கவிதைமணி

ஆசையால் அலைந்து திரிந்து
அம்பாரமாய் தேக்கி வைத்தீர்கள்.
ஓசையின்றி இருட்டறைக்குள்
ஒளித்துதான் வைத்தீர்கள்.

தேடியலைந்து நடந்து இன்று
தேம்பி அழ வைத்துவிட்டது.
வாடி வதங்கி விட்டோம்,
வாழ்க்கையையும் தொலைத்தோம்.

பீடுநடை போட்டவரெல்லாம்
பித்தாகி அலைவதுதானென்ன?
ஓடு கடைசி வரைக்கும் ஓடென
ஆட வைத்து அலைக்கழிப்பதேன்?

பணத்தின்அருமையை தெரியவைத்து
பண்பையும்,பக்குவத்தையும் தந்தது,
குணமொன்றுதான் வாழ்வென்ற
கொள்கைதான் இன்று வென்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களின் ஆட்சியர்கள் இடமாற்றம்!

ஆறுமுகனேரியில் தெருமுனைப் பிரசாரம்

பாதுகாப்பும் பயணமும்...

திருப்பதி லட்டு விவகாரம்: சுப்பிரமணியன் சுவாமி மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம்

மாற்றத்தை ஏற்படுத்திய தமிழர் பண்பாடு

SCROLL FOR NEXT