அழுதகண்ணீர் அன்பினடை யாள மாகும் ஆற்றவொண்ணா துயர்தீர்க்கும் வலிமை கொண்டுதொழுதகரம் துணையாக நிற்கும் அந்தத் தூயமனக் கண்ணீர்தான் சொந்த மாகும்.விழும்போது தூக்கிவிடும் கைகள் என்றும் விரல்களினால் துடைத்துவிடும் கண்ணீஂரையே...தழும்பாகக் கண்ணீரின் தடங்கள் காயா தழுவிநிற்கும் தென்றலென மேனி தீண்டி.முதலையெனக் கண்ணீரை வடிக்கும் மக்கள் முற்றுமொரு வேடமாகத் துக்கங் காட்டிமுதுகுக்குப் பின்பகடி பேசி கேலி முழுவதுமாய் செய்துமனக் கோட்டந் தன்னைபொதுவினிலே காட்டிமிக மகிழ்வர் மாக்கள் போல்வரிவர் மாந்தரல்லர் இவர்போன் றோரைமெதுவாக வல்ல,மிக வேக மாக விரட்டியடித் தலேநமக்கென் றென்றும் நன்றாம்.துடைக்கப்ப டாதழுத கண்ணீர், பாயும் தோட்டாவாய் ஆயுதமாய்த் தோற்றங் கொள்ளும்மடைதிறந்தாற் போலவொரு மாற்றங் காட்டும் மக்களிடை புரட்சிசெய உறுதி செய்யும்கடையரின் கண்ணீரோ அழுத்தங் கொண்டு கச்சிதமாய்ச் சுனாமியாக அழிக்கும் மெல்லவெடித்தெழவே வீரியமாய்ச் சமுதா யத்தில் விறுவிறுப்பாய் மறுமலர்ச்சி உதய மாக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.