கவிதைமணி

 அழுத கண்ணீர்: -ரெத்தின.ஆத்மநாதன்,

கவிதைமணி

அழுத கண்ணீர்தான்...
அக்காலம் முதலே...
சரித்திரத்தைப்...
புரட்டிப் போட்டிருக்கிறது!

சீதை அழுத காரணத்தாலேயே...
சிங்கள மன்னன்...
அரியணை இழந்து...
ஆருயிர் நீத்தான்!

கண்ணகியின் கண்ணீர்தான்...
மதுரைப் பாண்டியனை...
உள்ளம் நோகச்செய்து...
உயிர் இழக்கச் செய்தது!

பாஞ்சாலி அழுத கண்ணீர்தான்...
துரியோதன னை துவளச் செய்து...
துயரத்தின் எல்லைக்கு ஓட்டி...
துன்பத்தில் சாகடித்தது!

புரட்சிகள் வெடித்ததும்...புது
மாற்றங்கள் வந்ததும்...
அந்தந்தக்காலச் சமுதாயத்தினர்...
அழுத கண்ணீரால்தான்!

அன்பின் பிரிவில்...
ஆற்றாமையின் துயரத்தில்...
இன்பத்தின் தடங்கலில்...ஈண்டு
வருவது அழுகை!

'அல்லலில்...ஆற்றாமையில்...
அழுகின்ற கண்ணீர்தான்...
அன்றைக்கே செல்வத்தைத் தேய்க்கும்!'
என்றான் தெய்வப் புலவன்!

அன்பினால் வரும் அழுகை...
ஆத்மாவையும் மகிழ்விக்கும்!
முதலமைச்சர் இழப்பினாலே...
முழுஉலகும் அழுத கண்ணீரில்!

உழைத்துச் சம்பாதித்து...
உருவாக்கிய பணங்கூட...
அவசரத்திற்குப் பயன் படாவிட்டால்...
ஆற்றாமையிலும் கண்ணீர்தான்!

ஏழைகளெல்லாம் தினம்...
இரண்டாயிரத்திற்கே ஆலாய்ப் பறக்க...
கோடிக்கணக்கில் சிலர் கொண்டாடும்போது...
வருவதும் அழும் கண்ணீர்தான்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூர் தவெக கூட்டத்தில் உயர் நீதிமன்ற விதிமுறைகள் மீறல்! காவல்துறை

தவறாக வழிநடத்தும் ராகுல் மீது வழக்கு: மத்திய அமைச்சர்

சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள்! பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்து; சசிகலா முக்கிய முடிவு!

தனியார் ஆம்னி பேருந்து மோதி திமுக பிரமுகர், அவரது தோழியும் பலி

SCROLL FOR NEXT