கவிதைமணி

அழுத கண்ணீர்: லூர்து எஸ். ராஜ்

கவிதைமணி

பிள்ளை அழுத  கண்ணீர் பெற்ற தாயை அழைத்தது
பெரும் பக்தன் வடித்த கண்ணீர் கடவுளை வளைத்தது
கணவரை  இழந்தவள்   கண்ணீர் நிலத்தை நனைத்தது
கடலலை கொண்ட நீரோ மீனவன் மனைவி வடித்தது.

சீதையின் கண்ணீர் தென்னிலங்கையை அழித்தது;கற்பரசி  
கண்ணகியின் கண்ணீர் கவினுரு மதுரையை மாய்த்தது.
போதையில் தள்ளாடி பாதைமாறி வருகின்ற கணவன்
பேதை மனைவி வடிக்கும் கண்ணீர் என்னத்தை செய்தது ?

பசியால் வாடும் ஏழையின் கண்ணீர் , படுக்கையில் கிடந்து
பலநாள் வடிக்கும் நோயாளியின் கண்ணீர், பிள்ளைகள்   
அனாதை யாக்கிய முதியோர் கண்ணீர் , பெற்றோரை இழந்த
சுனாமிக் குழந்தையின் கண்ணீர், இவை  துடைப்பவர் யாரோ?

மனித நேயம் மலர்ந்ததாயின் புனிதமாகும் இங்கு  புத்துலகம்;
இனியொரு கண்ணீர்த்துளி எங்கும் விழுந்து வீணாகிடாமல்
மழைநீர்த்துளி அன்றி வேறோர் துளியில்லை எனும்நிலை
விழைந்தி டலாகும் ; விழிநீர் மறையும்; வியனுலகு மகிழும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூர் தவெக கூட்டத்தில் உயர் நீதிமன்ற விதிமுறைகள் மீறல்! காவல்துறை

தவறாக வழிநடத்தும் ராகுல் மீது வழக்கு: மத்திய அமைச்சர்

சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள்! பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்து; சசிகலா முக்கிய முடிவு!

தனியார் ஆம்னி பேருந்து மோதி திமுக பிரமுகர், அவரது தோழியும் பலி

SCROLL FOR NEXT