கவிதைமணி

சுனாமி சுவடுகள் : கே. நடராஜன்

கவிதைமணி
ஆழிப்  பேரலை  இங்கு பதித்த சுவடுகள் என்றும் அழியாத வடுக்கள் அன்றோ ! ஆண்டு பன்னிரண்டு ஆனாலும் மறக்க முடியுமா  அந்த நாளை இன்றும் ?சுனாமியின் சுவடுகளில் கால் பதித்து  மரம் பல பலி கொண்டு ஒரு நகரின் வாழ்வு  முடக்கி " வார்தா "ஆடிய ஆட்டம் ஆழிப் பேரலையின் மற்றுமொரு அவதாரமா ?  பஞ்ச பூதங்கள் வரிசை கட்டி கொஞ்சமும் இரக்கம் இல்லாமல் ஒன்றன் பின் ஒன்றாக   அசுர ஆட்டம் போடுவது  ஏன்  இந்த இசை  விழா மாதத்தில் மீண்டும்  மீண்டும் ?வசை பாடவில்லை நான் உங்களை பஞ்ச  பூதங்களே! அசைக்க முடியாத நம்பிக்கை எனக்கு உங்கள் மீது !எங்களைக் காக்கும் தாய் அல்லவா நீங்க ...பிள்ளைகள் எங்களை நீங்க தண்டித்தது போதும் ...உங்க அடிகளின் வடுக்கள் கட்டாயம் தடுக்கும் எங்களை உங்கள் கண்டிப்பான நெறி முறை  விதி முறை  மீறாமல் இனிமேல் ! நம்புங்க எங்க வாக்கை !நம்பி எங்களை வழி நடத்துங்க ஒரு தடங்கல்  இல்லா பாதையில் நாங்கள்   எங்கள் பாத  சுவடு பதிக்க

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!

எனக்கு தடையாக இருக்கும் அந்த சிலர்... சிவகார்த்திகேயன் பேச்சு!

ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!

பிளடி ரோமியா! சமையல்காரர் டூ கேங்ஸ்டர் நானி!

திமுகவிடம் 41 தொகுதிகள் கோரும் காங்கிரஸ்!

SCROLL FOR NEXT