கவிதைமணி

பட்டாசு சத்தம் ! கவிஞர் இரா .இரவி !

கவிதைமணி

பட்டாசு சத்தம் கேட்கும் போதெல்லாம்
பரவவில்லை மகிழ்ச்சி என்றும் எனக்கு !

பட்டாசு சத்தம் கேட்கும் போதெல்லாம் 
படரும் கொடிய தீயே நினைவில் வருகிறது !

பட்டாசு  விபத்தால் உயிரிழந்த பல 
பரிதாபங்கள் நினைவில் வருகின்றன !

பட்டாசுப்   பட்டு பாவம் சிறிய 
பிஞ்சுகள் கூட கருகியதுண்டு !

கோயில் விழாவில் பட்டாசு வெடித்த 
கொடூரங்கள் நினைவில் வருகின்றன !

தீபாவளியன்றே பட்டாசு விபத்தால் 
தீயுக்கு இரையான நிகழ்வு நினைவுக்கு வந்தது !

தீபாவளியன்றே குடியிருந்த கூரையில்
தீப்பிடித்து  குடிசை இழந்தோர் உண்டு !

பட்டாசு செய்யும் தொழிலுக்கு வ
ந்து படிப்பை விட்டோர் நினைவுக்கு வருகின்றனர் !

பட்டாசு தொழிற்சாலை விபத்தில் 
பலியான தொழிலாளர்கள் நினைவு வந்தது !.

ஏழைக்குழந்தை பட்டாசு கிடைக்காமல் 
ஏங்கிய நிலைகளும் நினைவிற்கு வந்தது !

பட்டாசு விபத்தால் ஆதரவற்றோர் ஆன
பல குடும்பங்கள் நினைவில் வந்தன ! 

கரி காசாகுது நெய்வேலியில் 
காசு கரியாகுது தீபாவளியில் நினைவிற்கு வந்தது !

பட்டாசுக்கு  வீணாய் செலவிடும் பணத்தை 
பண்போடு ஆதரவற்றோர் விடுதிக்கு வழங்கலாம் !

பட்டாசுக்கு  வீணாய் செலவிடும் பணத்தை
பயன் தரும் நூல்கள் வாங்கி மகிழலாம் !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளை நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலா

1085 மின்சார பேருந்துகளை கொள்முதல் செய்யும் தெலங்கானா அரசு!

ரூ. 5,000 உரிமைத் தொகை, தொழில் முதலீடுகளுக்கு அமைச்சரவையில் அனுமதி!

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

SCROLL FOR NEXT