கவிதைமணி

பட்டாசு சத்தம்: அழகூர்.  அருண்.  ஞானசேகரன்.

கவிதைமணி
பள்ளிக்   குழந்தைகள்   வயதினில்   நமக்கெலாம்
                 பரவசம்   தன்னைத்   தருவதெலாம் ,
         பட்டாசு   சத்தம்தான்   என்பதே   உண்மையாம்
                  பண்டிகை   என்றாலே   தீபாவளி !
விட்டிடும்   வாணங்கள்   உயரவே   சென்றிட்டு
                  விண்ணைத்   தொடுகின்ற   போதினிலே ,
         வியப்பும்   மகிழ்வும்   மனதினில்   பொங்கிடும்
                  வேறெதில்   நாமதைக்   கண்டிடுவோம் ?
எட்டவே   நில்லென   தாய்தந்தை   சொல்லியும்
                  யார்தான்   அதுதன்னை   மதித்திட்டோம் ,
          இலட்சுமி   வெடிதன்னை   வெடித்திட்டுப்   பிறர்முன்னம்
                  இறுமாப்   படைந்ததை    யார்மறப்பார் ?
கட்டுக்   கட்டாகப்    பட்டாசை    வாங்கியக்
                  காலமொன   றுண்டாம் ,   இன்றைக்கோ
          கைக்குள்   அடங்கிடும்  அளவே   வாங்கவும்
                  கண்டிப்பாய்    இருநூறு   வேண்டிடுதே !    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

சூப்பர் 8 சுற்று: மே.இ.தீவுகளுக்கு எதிராக ஜிம்பாப்வே பந்துவீச்சு!

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup

ஃபார்மில் இல்லாத பேட்டரை பிளேயிங் லெவனிலிருந்து நீக்க ஆலோசனை; சஞ்சு சாம்சனுக்கு இடமா?

SCROLL FOR NEXT