கவிதைமணி

பட்டாசு சத்தம்: கவிஞர். கு. நா. கவின்முருகு.

கவிதைமணி
தீபங்கள் ஏற்றிடுவோம்; இந்நாள் தன்னில்    தீவினையாம் இருளகற்றி ஒளியே ஓங்க!சாபங்க ளென்போமே நாட்டின் தீயோர்   சதைக்காக ஊறிடுவார் மிருகத் தோலில்!ஆபத்தாம் இவர்களாலே பெண்க ளுக்கே   அரிதார ஒப்பனையில் நல்லார் போலே!கோபத்தால் கொன்றிடுவர் காமத் தாளே;   கொடுமைதனை விரட்டிடுவோம் தீப மேற்றி!விழித்திடுவோம் கல்லாமை யிருள கற்றி!    மீட்டிடுவோம் சமூகத்தின் வளர்ச்சி யீட்டி!மொழிந்திடுவோம் தமிழ்மொழியை நாவி னிக்க!    மூத்தமொழித் தேசியமாய் தரணி யாளா!அழியாத கனவுகளாய் நெஞ்சி லேந்தி   ஆளுமொழி தமிழென்றே கவிதைக் கொஞ்சி!செழித்திடுவோம் தமிழாலே என்றும் நாமே   தீபத்தை யேற்றியேநாம் உறுதி கொண்டு!ஆயுதமி லாததேசம் காணச் செய்வோம்   ஆலயங்கள் தொழுதிட்டால் அன்பு ஓங்கும்தாயுணர்வாய் நேசிக்க கற்போம் நாளும்    சாதிமத பேதங்க ளற்றே வாழசாயுமிங்கே கொடியவர்கள் சாதிப் போக்கு   சரித்திரங்கள் எழுதட்டும் ஒழிந்த தென்றேபாயுமிங்கே வெடிகளாக சட்டம்; யாரும்   பாய்ச்சலாக நற்சமூகம் காணச் செய்வோம்வன்முறைகள் அழித்திடுவோம் அமைதி காண    வன்கொடுமை யில்லாத தேசம் காணதன்னடக்கம் போதுமினி எழுக தீயாய்    சாதிக்க பிறந்தவனே தமிழன் என்போம்வென்றிடுவான் புரட்சியாளே நாட்டை வீட்டை   மேன்மையோடு  நன்மைகாண நாட்டி னோடுஎன்னென்று செப்பிடுவேன் நலனே பேண   இந்நாளில் பட்டாசு சத்தம் போலே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

சூப்பர் 8 சுற்று: மே.இ.தீவுகளுக்கு எதிராக ஜிம்பாப்வே பந்துவீச்சு!

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup

ஃபார்மில் இல்லாத பேட்டரை பிளேயிங் லெவனிலிருந்து நீக்க ஆலோசனை; சஞ்சு சாம்சனுக்கு இடமா?

SCROLL FOR NEXT