கவிதைமணி

பட்டதாரி:    பூ. சுப்ரமணியன்

கவிதைமணி

அவன்
படித்த பட்டதாரிதான்
எந்தப் பண்ணையாரும்
வேலை கொடுக்க
முன்வரவில்லை !

சென்ற இடமெல்லாம்
வேலை காலியில்லை
போர்டு பேசாமலே
அவனை வாசலோடு
வழி அனுப்புகிறது !

அருகே சென்றாலும்
கடல் அலைகள் கூட
அவன் பாதங்களை
முத்தமிடாமலே
செல்லுகின்றன !

கண்களில் கண்ணீரோ
வற்றி விட்டது - அவன்
மனமோ ரத்தக்கண்ணீர்
வடிக்கின்றன !

ஏங்கிய மனம்
தூங்கிய நினைவுகள்
கனவாக வந்து அவனை
பயமுறுத்துகின்றன !

அவன்
நாள்தோறும் படித்த
நாளேடுகள் எல்லாம்
பட்டதாரிகளுக்காக 
புலம்புகின்றன!

அவன்
பட்டதாரி ஆனவுடன்
வானில் பறந்தான்
கனவில் மிதந்தான் !

வேலையில்லாதவன்’
என்று அவன் 
தேய்ந்த செருப்பு கூட
ஏளனமாக சிரிக்கின்றன !

‘வெட்டி ஆபிசர்’ ‘தண்டச்சோறு’
படிக்காமலே அவனுக்கு
கிடைத்த பட்டங்களால்
படித்த பட்டமே
மறந்து விட்டது !

அரசாங்கத்திடமிருந்து
வாங்கிய பட்டத்திற்கு
வேலையில்லை !

உதவிப்பணம் கிடைத்தது
வேலையில்லா பட்டதாரி
சான்று அவனுக்கு
கிடைத்த பின்பு !                               

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளை நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலா

1085 மின்சார பேருந்துகளை கொள்முதல் செய்யும் தெலங்கானா அரசு!

ரூ. 5,000 உரிமைத் தொகை, தொழில் முதலீடுகளுக்கு அமைச்சரவையில் அனுமதி!

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

SCROLL FOR NEXT