வழிதவறிய பயணங்கள் : பாவலர் கருமலைத்தமிழாழன்
Updated On : 25 ஜனவரி, 2024 at 12:12 AM
பொன்னான காலமென்று ஞாலம் போற்றப் பொலிவான இலக்கியங்கள் வடித்துத் தந்தமுன்னோர்கள் செம்மையாக அமைத்து வைத்த முதன்மையான வழிநடக்கத் தவறி விட்டோம்மின்மினியின் வெளிச்சத்தை விளக்காய் ஏந்தி மிரட்டுகின்ற இருள்விலக்கச் செல்வ தைப்போல்நன்றென்றே மேல்நாட்டு நாக ரீகம் நாமேற்றுப் பழம்பண்பைத் தவற விட்டோம் !களவுபார்த்துக் கற்புதனில் கைபி டிக்கக் கடல்கடந்து பொருளீட்டி ஆண்கள் வந்துகளம்நின்ற ஏறடக்கி சீர ளித்துக் கன்னியினை மணம்முடித்த காலம் மாறிஅளவுசொல்லித் தங்கநகை கேட்டு ; செல்வம் ஆயிரம்பல் லாயிரமாய் வேண்டு மென்றேஉளம்நோகப் பெண்மையினை விலையாய்ப் பேசும் உரமற்ற பேடியராய் ஆனா ரின்று !கல்விகற்ற பாமரராய் இருந்த போதும் கருணையொடு மனிதநேயம் பெற்றி ருந்தார்சொல்லொன்று செயலொன்றாய்க் கிராம மெல்லாம் சொந்தமெனப் பாசமுடன் அணைத்து நின்றார் !கல்விகற்றுப் பெருமறிவு பெற்ற இன்றோ கருணையினை நேயத்தைத் தவற விட்டுச்சொல்வேறு செயல்வேறாய்த் தாயைக் கூட சொந்தமில்லை என்றேகாப்பகத்தில் விட்டார் ! ( 1 ) கோட்டையாக மலைதன்னைப் பாது காத்து கோலோச்ச காடுகளை வளர வைத்துநாட்டைவள மாக்குமாற்றைத் தூய்மை யோடு நறுமணலில் ஓடவைத்தார் முன்னோர் அன்றுகூட்டாக மலைதகர்த்து காட்டை வெட்டிக் கூறுபோட்டு மணல்விற்றே ஆற ழித்துநாட்டினையே நரகமாக மாற்றி யின்று நல்காற்றை மாசாக்கி வாழ்வி ழந்தோம் !ஏர்உழுது தழையுரத்தால் பயிர்வ ளர்த்து ஏற்றவுடல் வலிமையோடு நோய்க ளின்றிசீர்இயற்கை வளங்களொடு இயைந்த வாழ்வாய் சிறப்புற்று நம்முன்னோர் வாழ்ந்தார் அன்று !ஊர்வளர்த்த வயல்ஏரி குளம மழித்து ஊற்றுநீரைக் காலிசெய்து நோய்கள் பெற்றுவேர்போன்ற இயற்கையின்வே ரறுத்தே இன்று வேற்றுவழி பயணத்தில் சுயமி ழந்தோம் !மன்னராண்ட போதுமக்கள் நலனைக் காத்தார் மனுநீதிப் பாண்டியனும் செங்கோல் காத்தார்மன்னர்போய் மக்கள்தாம் ஆளும் இன்று மன்னராகிப் போனார்கள் அமைச்ச ரெல்லாம் !தன்னலத்தால் ஆட்சியினை ஊழ லாக்கித் தாம்கொழித்து மக்களுக்கு வறுமை தந்தார்நன்நெறியாம் குறள்வழியைத் தவற விட்டு நாம்பயணம் செய்கின்றோம் நம்மை விற்றே ! ( 2 )