செல்லாக் காசு: சசி எழில்மணி
Updated On : 25 ஜனவரி, 2024 at 12:15 AM
ஊர்முழுதும் சுற்றிவந்து
உலகினையே ஆளுது
இருப்போருக்கும் இல்லார்க்கும்
சட்டத்தையே மாற்றுது
பணமிருந்தால் போதுமென்ற
எண்ணத்தையே வளர்க்குது
அன்பினையும் பண்பினையும்
அடியோடு அறுக்குது
நைந்து கிழிந்து கிடந்தாலும்
செருக்கோடு கிடந்தது
காலங்கள் மாறிட
மதிப்புகளும் மாறுது
உச்சத்தில் இருந்தது
மிச்சமாய் கிடக்குது
பாதாளம் பாய்ந்ததும்
பயனற்று இருக்குது
என்கை வரமறுத்த
இன்றைய செல்லாக் காசு