கவிதைமணி

செல்லாக் காசு: -ஆ.மகராஜன்

கவிதைமணி
பொங்கலுக்காகப் பரணில் கிடந்த பழைய பொருட்களை ஒதுங்கவைத்துக் கொண்டிருந்தபோதுதுருப்பிடித்த ஒருபழைய டிரங்க் பெட்டிக்குள் அந்தசுருக்குப்பை  கிடைத்தது...அப்பொழுது யாரும் அக்கறையோடு கண்டு கொள்ளாத,பாட்டி கடைசி வரை தன் இடுப்பிலேயேவெள்ளைப் புடவைக்குள் சொருகிப்பாதுகாத்து வைத்திருந்த பை அது...இறுகிப்போயிருந்த சுருக்குக் கயிற்றைப்பிரயத்தனப்பட்டு இழுத்துத் திறந்ததும்,உள்ளே பல்லாண்டுகளாய்அடைபட்டுக் கிடந்த எராளமான செல்லாக் காசுகள்‘கலகல’வென தரை முழுக்கச் சிதறிஉருண்டோடின...நடுவில் ஓட்டையோடு செம்பினாலானஅணா காசுகள் நிறைய...தவிரவும் சிறிய சதுர ஒரு பைசா, ஐந்து பைசாக்கள்,விளிம்பில் அழகான வளைவுகளோடுஇரண்டு, பத்து, காசுகள்..கருப்பாய் அழுக்குப் படிந்து,சுரண்டினால் உள்ளே மஞ்சள் நிறத்தில்மறைந்திருக்கும்  தாமரை மலரோடு பித்தளை இருபது பைசாக்கள் ..எல்லாமே இன்று செல்லாக் காசென்றாலும்,இவைகளும்,ஏதோ ஒரு காலக் கட்டத்தில்,மதிப்போடுதான்  இருந்திருக்கும்....பாட்டி எனக்காகக் கூடஅவற்றை அக்கறையோடு சேமித்துப் பாசமாய் பாதுகாத்திருக்கலாம்..இருந்த வரையில் யாரும்,கண்டு கொள்ளவேயில்லை..படுக்கையிலிருந்த பாட்டியைப் போலவேஅவரது இடுப்பில் செருகியிருந்த இந்த சுருக்குப் பையையும்..!சிதறி ஓடியவைகளையெல்லாம் பொறுக்கிஉள்ளே போட்டு,மீண்டும் சுருக்குக் கயிற்றை இழுத்து மூடிய போது,ஏனோ ரொம்ப கனமாய் இருந்ததுமனமும்,பாட்டியின் அந்த பழைய சுருக்குப்பையும்..!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவள்ளூா் மாவட்டத்தில் 31.57 லட்சம் வாக்காளா்கள்

2,007 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா - முதல்வா் வழங்கினாா்

பத்ம விருதுக்கு தோ்வானவா்களுக்கு பாராட்டு

100 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு

பாலியல் தொல்லை: அரசு மருத்துவமனை ஊழியா் கைது

SCROLL FOR NEXT