கவிதைமணி

செல்லாக் காசு:  கவிஞர் "இளவல் "  ஹரிஹரன்

கவிதைமணி

நாணயமில்லாச் சொற்களெல்லாம்
நடப்பினிலே என்றென்றும்
செல்லாக்காசுகளே......

உயிரில்லா உடம்பும்
ஒருபோதும்
செல்லுபடியாவதில்லை....

இன்றைக்குச் செல்லுபடியாவது
என்றைக்கும் செல்லுபடியாகும்
என்னும் நிலைமை
இருப்பதில்லை என்றும்......

காலம் மட்டும்
செல்லுபடியாகிக் கொண்டிருப்பதால்
செல்லாக்காசு செலாவணியாவதில்லை......

சில்லறைகளின் மதிப்பாவது
தேறிவிட வாய்ப்புண்டு....
செல்லாக்காசுகளின்தாட்களோ
சிறிதும் தேறுவதேயில்லை.......
அழிந்துபோகும்

எல்லாவற்றின் நிலைமையும்
இப்படித்தான்.....ஒரு நாள்
செல்லாததாகிவிடும்....
உயிர் உட்பட......!      

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவள்ளூா் மாவட்டத்தில் 31.57 லட்சம் வாக்காளா்கள்

2,007 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா - முதல்வா் வழங்கினாா்

பத்ம விருதுக்கு தோ்வானவா்களுக்கு பாராட்டு

100 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு

பாலியல் தொல்லை: அரசு மருத்துவமனை ஊழியா் கைது

SCROLL FOR NEXT