சேர்த்து வைத்த செல்வம் எல்லாம் ஒரே ஒரு சொல்லால் செல்லாக் காசானதே!பார்த்து நடந்து கொள் தம்பி ...புரிந்து கொள்ளவேண்டும் நீ ...செல்வாக்கு ஒருவனுக்கு அவன் சேர்த்து வைக்கும் பணத்தால் அல்ல என்று! சுத்தமான சொல்வாக்கு தரும் உனக்கு ஒரு தனி செல்வாக்கு !கறை படியா கரமும் நெறிபிறழா வாழ்வு முறையும் சேர்த்து வைக்கும் உனக்கு எங்கும் என்றும் செல்லுபடியாகும் ஒரு செல்வாக்கை !காசு பணம் செல்லாது நாளை முதல் என்று சொல்ல முடியும் ! ஆனால் மாசற்ற செல்வாக்கு செல்லாது இனிமேல் என்று சொல்ல முடியுமா யாரும் ? யோசிக்க வேண்டும் நீ... தம்பி !
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.