எழுத்து: அருள் .க. இராபர்ட்
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:54 PM
அரிச்சுவடி கற்கையில்ஆரம்பித்த எழுத்து இன்னும் .. இன்னமுமாய்ஈரிருப்பது ஆண்டுகளாய் ...உடன் நண்பர்களின் ஊக்கமும், ஆக்கமும் எத்தனை கவிதை எழுதி முடித்தும் ,ஏதும் பிரசுரமாகாத தவிப்பு ...ஐயம் இல்லை, என்னிடம் பிழையில்லைஒன்றுக்கும் உதவாத ஓர் உதவாக்கரை நான் ,...ஒளடதம் பேசி ,இகழும் மனிதர்முன் அஃது என் தலையெழுத்து என்றே துவளும் வேளையில்...கவிதைமணி என் கலக்கம் தீர்த்தது எந்தன் எழுத்தும் ....கவிதையாய் ஒலித்தது