எழுத்து; நெய்வேலி - தேன்ராஜா'
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:54 PM
உன் விழி
ஆயுதம்
கொண்டு
என்றோ என்
உயிரை
கவர்ந்து விட்டாய்
இப்போது
இருப்பதோ
என் மெய்
மட்டும்தான் ...
மெய்யாலுமே
நீ என் உயிராவாய்
ஆயுதம் ஏந்தி
யார் வந்தாலும்
உன் மெய்யை
என் கண்ணில்
ஏந்தி அவர்
உயிர் நீக்குவேன்.
இல்லையேல் ..
உன் உயிர் நானாக
என் மெய் விட்டு
நீங்குவேன்... ...
உன் விழி
ஆயுதம்
கொண்டு
என்றோ என்
உயிரை
கவர்ந்து விட்டாய் ....
Advertisement