எழுத்து: பூ. சுப்ரமணியன்
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:54 PM
எழுத்துக்கள் சங்கமத்தில்எத்தனை கோடி அர்த்தம் வைத்துஇன்பம் கண்டாய் இறைவா !எழுதப் படிக்கத் தெரிந்தவனுக்குஎழுத்துக் குவியல் சோலைவனம்தெரியாதவனுக்கு பாலைவனம் !‘ அ’ எழுத்து உயிர்‘ ம்’ எழுத்து மெய்‘ மா’ எழுத்து உயிர்மெய்உயிர், மெய் அணிவகுத்துஉயிர்மெய்யும் சேரும்போது‘அம்மா’ உறவு வரும்.இப்படி எழுத்துக்களின் உறவில்பல்வகை உறவுகள் மலரும் !எந்த மொழியானால் என்ன !?எழுத்துக்கள் எல்லாமேசொற்களின் சங்கமத்திலேமொழியே பிறக்கிறது !விதை விதைக்காமல்செடி கொடிகள் வளருமாஎழுத்துக்கள் அணி வகுக்காமல்கவிஞன் கவிதைதான் பேசுமா?காவியங்கள், கதைகளும்உருவாகுமா ? தோன்றுமா ?தனிமரம் தோப்பாகாது - ஆனால்தனி எழுத்தும் அர்த்தம் ஆகும்சுடும் எழுத்து தீ சுட்டும் எழுத்து நீ அழைக்கும் எழுத்து வாவிரட்டும் எழுத்து போ உழைக்கும் எழுத்து கைமணக்கும் எழுத்து பூ பூக்களை அழகாக தொடுத்தால்நறுமணம் கொண்ட பூமாலைஎழுத்துக்கள் சொற்கள்அழகாக அணிவகுத்து நின்றால்பலரும் விரும்பும் பாமாலை !