நீதியைத் தேடி: நெய்வேலி தேன்ராஜா
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:54 PM
எங்கும்
போகவேண்டாம் ....
அது உனக்குள்ளும் இருக்கிறது
எனக்குள்ளும் இருக்கிறது
அதுதான் மனசாட்சி
அதுவே மனுநீதிக்கு
ஒப்பாகும் ...
Advertisement
நிதி கொடுத்தாலும்
நீதி கிடைக்கும்
ஆனால் அதெல்லாம்
உண்மை நீதியல்ல
உலகே நிந்திக்கும்
பொய்த்தீயாகும்......
உனக்கொரு நீதி
எனக்கொரு நீதி
அதெல்லாம்
நீதியல்ல
யாவருக்கும் நன்மை
செய்வதே நீதி
அதுவே உலகநீதி ....
நீதியை தேடி
எங்கும்
போகவேண்டாம்
அது உனக்குள்ளும்
இருக்கிறது
எனக்குள்ளும் இருக்கிறது