நீதியைத் தேடி: - கோ. மன்றவாணன்
மாணவர்களிடம் பணம்வாங்கிக்கொண்டு
பாஸ் போடுகிறார்
ஆசிரியர்
கள்வனை விட்டுவிட்டு
பறிகொடுத்தவனைக் கைது செய்கிறது
காவல் துறை
அரசுக் கோப்புகளை நகர்த்தும் சக்தி
குறுக்கு வழியில் பணம்குவித்த
குபேரர்களுக்குத்தான் உண்டு
Advertisement
கல்வியும் மருத்துவமும்
ஏழைகளுக்கு எட்டாத
சந்திர சூரியர்கள்
நித்தமும்
நீதியைத் தேடி
நீதிமன்றம் செல்கிறேன்
அங்கே
ஓங்கி உயர்ந்து
உலகளந்து நிற்கிறது
அநீதியின் தரிசனம்
தொண்டு செய்யும் நல்லவர்நோ
யில் நொடிந்து
பாயில் நைந்து
வறுமையில் வதங்குகிறார்
மாபாதகங்கள் செய்தும்
மகிழுந்தில்
மகாராஜாக்களாக வருகிறார்கள்
பொல்லாதவர்கள்
அவர்களைக் கைகூப்பித் தொழுகிறது
உலகம்
நல்லது செய்வோர்க்கு நல்லது நடக்கவும்
கெட்டது செய்வோர்க்குக் கெட்டது நடக்கவும்
வேண்டி முறையிட்டேன்
கடவுள் நீதிமன்றத்தில்
நேற்றே
அவர் கோவிலிருந்து
அமெரிக்காவுக்குக் கடத்தப்பட்டதாக
இன்று
பத்திரிகைகளில் பரபரப்புச் செய்தி