கவிதைமணி

எழுத்து: பார்த்தசாரதி

கவிதைமணி
எண்ணும், எழுதும் இரு கண்கள் என்றான்எண்ணிற்கு பிறகே எழுத்தை வைத்தான்எண்ணிற்கும் எழுத்திற்கும் ஓர் உறவு வைத்தான்இரண்டும் ஒன்றையொன்று சார்ந்ததே என்றான்எண்ணால் விண்ணையும்,மண்ணையும் அளக்கலாம்எழுத்தால் மட்டுமே அவைகளின் தன்மையை பார்க்கலாம்எழுத்தறிவித்தவன் இறைவன் எனக் கூறுவர்  சான்றோர்நான்கெழுத்து படிக்காதவனின் செல்வமும் பயனற்றது என்பர்!ஓம் என்ற எழுத்திலிருந்து  பிரணவம் பிறந்ததேஓங்கார சக்தியுடன் சமயமும்,பக்தி பாடல்களும்  தோன்றியதே  .தாய்மொழி உயிரும்,மெய்யும் சேர்ந்து உயிர்மெய்யெழுத்தானதேநமது உயிரும், உடலும் சேர்ந்து  ஆன்மா  ஆனதே !  எழுத்து என்பது, உயிர்மெய் எழுத்துக்களின்  கூறியீடுகளே,இவைகளே வார்தைகளாகி, நூல்களின்  தோற்றங்களே நூல்கள் எழுத்து, மற்றும் ,வார்த்தைகளின்  கோர்வையே , உலகெங்கும்   பலவடிவில் செய்தியாக  உலா வருபவையே !         மனிதன் கையால் எழுதும்போது, கையெழுத்து என்கிறான்அவன் விதி முடிந்தால் அவன் தலையெழுத்து  என்கிறான்.எண்ணையும், எழுத்தையும் எழுதாமல் இருக்கமுடியாதுஇவ்விரண்டும் வாழ்வின் கண்கள் எனில், அது  மிகையாகாது!    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிரம்ப் இல்லத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை

இன்று வெற்றி யாருக்கு? தினப்பலன்கள்!

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

திமுகவின் தொகுதிப் பங்கீட்டுக் கணக்கு!

விஜய் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம்: வேலூா் அகரம்சேரியில் பிரம்மாண்ட ஏற்பாடு!

SCROLL FOR NEXT