பொம்மைகள்: ஆப்ரகாம் வேளாங்கண்ணி
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:57 PM
உயிருள்ள மனிதர்கள்
ஒரு சாராரை
உயிரற்ற பொம்மைகள்
வாழவைக்கிறது
பொம்மலாட்டம் வாயிலாக
அன்றும் இன்றும்
விழியுண்டு காட்சியில்லை
என்றிருந்தால்
காதுண்டு கேட்க வில்லை
என்றிருந்தால்
வாயிருந்தும் பேச்சில்லை
என்றிருந்தால்
மூக்கிருந்தும் மூச்சில்லை
என்றிருந்தால்
பொம்மைகள் போல் நாம் நம்மை நாமே
மாற்றிக்கொள்வோமெனில் தோன்றலாம்
அனேகமான நண்மைகள்
நிச்சயமாக
இந்த உண்மையினை இவ்
உலகோர் நம்பி
நடந்தால் வாழ்ந்திடலாம் செம்மையாக
இக்கலியுக சூழ்நிலைக்கு தகுந்தார் போலே