பொம்மைகள் : களக்காடு வ. மாரிசுப்பிரமணியன்
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:57 PM
அசையாத மனங்களையும்,
அசையவைத்திடும், பொம்மைகள்
தன்னைப்படைத்திட்ட
மனிதர்களையும்,
மயங்கவைத்திடும் பொம்மைகள்
உயிரற்றவைகளாகயிருக்கலாம்,
உயர்ந்த கோபுரங்களை,
உயிரோட்டமாக்குவதும்,
பொம்மைகள்
பொம்மைகள் பொய்மைகள் அல்ல,
பொம்மைகள் கற்பனைப் பொக்கிஷங்கள்
அரிய பொம்மைகளைக் காத்திட,
உரிய வழிகள் அமைப்போம்.
அதற்காவது ஒன்றாக அமர்வோம்…