பொம்மைகள்: மா.செந்தில்வேலன்
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:57 PM
நவராத்திரி நாயகர்களாய் நன் மக்களுக்கு ஆசிவழங்கும் ஆண்டவனாய் கொலு படியில் வீற்றிருக்கும் கோமகனாய்பார்த்தால் பரவசமூட்டும் பவளக்கொடியாய்பார்ப்போரையெல்லாம் மகிழ்ச்சியூட்டபுரட்டாசியில் புறப்பட்டாய்கசப்பான கடந்த கால நிகழ்வுகளை மனதிலிருந்து அகற்றிஎதிர்காலம் வசந்தமாக மலர கடவுளாய் காட்சி தந்தாய்மனதார மழலையை மகிழ்விக்க தங்க தாரகையாய்தாமரையில் குல விளக்காய் தோன்றினாய்பூ மாலையோடு பாமாலை பாடினாய்ஆரோக்கியமான சமுதாயம் மலரஉன்னை வைத்து கதை சொல்ல வைத்தாய்இனி வரும் காலம் இனிதாக உன் ஆசிகள்அனைவர்க்கும் கிடைக்கட்டும்