பொம்மைகள் - ஆர்.தியாகு
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:57 PM
முத்தமிட்டு அனைத்தாலும்
அடித்து உடைத்தாலும்
எப்போதும் சிரிக்கிறது பொம்மைகள்!
சுகமும் துக்கமும்
ஒன்றாகிப்போனது பொம்மைகளுக்கு.,
குழந்தையின் முதல்பேச்சு முழுவதும்
பொம்மைகள்கூடதான்..
அம்மா என்று அழுதால்…
பொம்மையை கொடு!
அப்பாவை தேடினால்…
பொம்மையை கொடு!
பசியில் இருந்தால்…
பொம்மையை கொடு!.
குழந்தைக்கு கடவுளாகிப்போனது பொம்மை!
பேசாத பொம்மைக்கு எவ்வளவு சக்தி?
Advertisement
வளர்ந்த பின்பும் கிழடாகிய பின்பும்
பொம்மை பழக்கம் தொடரதான் செய்கிறது..
அன்பு.. கோபம்.. கெஞ்சல் என
பேசாத கடவுள் பொம்மையிடமும்..