வீட்டுக் குழந்தைகளின்
கைபடவும் கண்படவுமே
ஏங்கிக் கிடக்கின்றன
கொழு படிக்கட்டுகளில்
குழந்தை பொம்மைகள் - ஆனால்
வீட்டுக் குழந்தையோ
கைபேசியுடன் விளையாடி
களைத்துத் தூங்குகிறது - எனினும்
என்றோ தீண்டப்படுவோம்
என்ற நம்பிக்கையில் வருடங்களாகத்
தவழ்ந்தே கிடக்கும்
கிழக்குழந்தை பொம்மை ஒன்று.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.