கவிதைமணி

பொம்மைகள்: லூர்து எஸ் ராஜ்

கவிதைமணி
உணவின்றி வாடும் ஏழையைக் கண்டு ஒதுங்கிச் செல்பவன்உடையின்றி வாடி, வெயிலில் காய்ந்தும் மழையில்  நனைந்தும்உழல்பவனுக்கு உடையளிக்காதவன்; தாகம் தீர்க்க நீரளிக்காதவன்;உண்டுறங்கக் கூரையிலாதவர்  வாழ வசிக்க வகை செய்யாதவன் .வலியவன் தன்னிலும் மெலியவனை தாக்கி  வருத்தும்போதுவலியச்சென்று மெலியவனுக்கு உதவாதவன் ; வாயில்லா பூச்சிகள்கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகும்போது , கிஞ்சித்தும் உதவாதவன் ;தட்டிக் கேட்காதவன் ; தாமரை இலைநீர் போல் சமூகத்தில் ஓட்டாதவன்.பெண்ணினம் துன்புறும்போது பெட்டைபோல் அகல்பவன் ; அவர்களைக்கண்ணெனப் போற்றிப் பாதுகாக்காதவன் ; கற்பெனும் திண்மை பெற்றபெண்ணைத் தூற்றி  பெண்டாள எண்ணி, மாசறு பொன்னை  மண்ணில் சாய்த்துமானபங்கம் செய்பவனை, உடன் கொதித்தெழுந்து   தடுத்து நிறுத்தாதவன்.பிஞ்சுக் குழந்தைகளை கெடுக்க  எண்ணும் ஆசிரியன்; எளியவர் உடமைமை  காக்காத, களவாடும்  காவலன்; போதகன் என்னும் போர்வையில் பாதகம் செய்பவன்;நீதியைக் காக்காத நீசன்; நேர்மை ஏற்காத தலைவன் ; உண்மையை மறைத்துபீதியை உண்டாக்கும் அரசு ; இவர் பின்னுள்ள பேரெல்லாம் பொம்மைகளே.பொம்மைக்கு உயிரில்லை; உண்மை பேச வாயில்லை; அநீதியைப் பார்த்துமது  சும்மாவே இருக்கும் ; துடிப்பில்லை; சுதந்திரம் இல்லை; எண்ணமில்லை;செயலில்லை; சொல்லில்லை; சிந்தனை இல்லை; செத்த பிணமும்செயலற்ற பொம்மையும் போல் வாழவோ நாம் பூமியில் பிறந்தோம்?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்காளர் இறுதிப் பட்டியல்: ஈரோட்டில் 17 லட்சத்து 40 ஆயிரம் பேர்!

மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!

ஏற்றத்தில் பங்குச்சந்தை! ஆட்டோ, வங்கிப் பங்குகள் உயர்வு!

தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு

விரோஷ்! திருமணத்திற்கு பெயரிட்ட விஜய் தேவரகொண்டா!

SCROLL FOR NEXT