கவிதைமணி

மனம் எனும் மாயப் பேய்: ம. அஹமது நவ்ரோஸ் பேகம் 

கவிதைமணி

ஆண்டி முதல் அரசன் வரை,
சாமானியன் முதல் சித்தர் வரை 
அனைவரையும் பேதமின்றிப் 
பாடாய்ப் படுத்தும் !

வெப்பமானி, பாரமானி என 
எத்தனையோ கருவிகள் எதை, 
எதையோ அளப்பதற்கு இருந்தாலும்,
மணிக்கு எத்தனை  கிலோமீட்டர் 
வேண்டுமானாலும் ஓடும், பறக்கும், தாவும்  
மனதின் வேகத்தை அளப்பதற்கு
மனிதனால் எந்தக் கருவியையும்
கண்டு பிடிக்கவே முடியாது !  

தீதும், நன்றும் பிறர் தர வாரா 
என்பது மனதிற்கே சொல்லப்பட்டதோ?
தீயன வேண்டாம், அடங்கு 
என்றால் அடங்காது !

நல்லன செய்வதற்கு அஞ்சாதே,  
என்றால் அடங்கும், மனதின் விசித்திரம்
மனிதர்களைப் பாதாளத்தில் தள்ளும்  
மனம் எனும் மாயப் பேயின் தந்திரம் ! 

மனதை அடக்கியோர் ஞானிகளானர். 
அடங்கியோர் நஷ்டமடைந்தனர். 
அறிவு என்னும் கடிவாளம் கொண்டு 
மனம் என்னும் மாயப் பேயை அடக்குவோர்  
ஈருலகிலும் வெற்றி பெறுவர்!

கடிவாளம் தவற விடுவோருக்கு 
எவ்வுலகிலும், என்றுமே தோல்விதான் !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இறுதி வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

இந்த சாதனையைச் செய்தது சாய் பல்லவிதான்!

யுபிஎஸ்சி தேர்வுக்கான கட்டணம் எவ்வளவு? அனைவருக்கும் கட்டணமா?

தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடி

இபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்டிரைக்! முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT