ஜன்னல் நிலா: ம.கிருஷ்ண குமார்
Updated On : 25 ஜனவரி, 2024 at 12:03 AM
அப்பா அயலூர் போக
அம்மா அலுவல் பார்க்க
அண்ணனும் அக்காவும் பள்ளி சேர
நிதம் பாட்டியுடன் மழலை பேசி
கதைகள் கேட்டு - பின்
சோறுண்ணவும் பார் பார்க்கவும்
ஜன்னலண்டை முளைக்கும்
பிள்ளை நிலாக்கள் நிறைந்தது எங்கள் நகரம்