ஜன்னல் நிலா: அ. வேளாங்கண்ணி
Updated On : 25 ஜனவரி, 2024 at 12:03 AM
மூடிவைக்கப்பட்ட ஜன்னல் பின்னேஜனிக்க முடியா நிலவுஜன்னல் திறக்கப்பட்ட அடுத்த நொடிவீட்டில் பிறப்பெடுக்கும்மனதின் நிலை பொறுத்துஜன்னல் நிலாவின் நிறம் இருக்கும்மகிழ்ச்சியான தருணங்களில்சிரித்திருக்கும் நிலாதுன்பமான நேரங்களில் நமக்காய்அழுதிருக்கும்பௌர்ணமி நிலவாய் வெளிச்சம்பொழியும் நாட்களில்ஜன்னல் மூடியிருந்தாலும் அதன்ஓரங்களின் வழிஒளியை அள்ளி வீட்டினுள்தெளித்திருக்கும்நாம் ஜன்னலைத் திறக்க..ஜெயித்ததாய் களித்திருக்கும்கற்பனை ஊற்றை கட்டவிழ்க்கும்ஜன்னல் நிலாஅமாவாசை ஆனாலும் கூடகவிதை ஊற்றை மட்டும்நிறுத்துவதில்லைநிலவில்லா கவிதைகள் பலருக்குபிடிப்பதே இல்லை...