ஜன்னல் நிலா! - ஆர்.தியாகு
Updated On : 25 ஜனவரி, 2024 at 12:03 AM
முகம்பார்க்க
குளமில்லை..
ஏரி முழுவதும் நிரம்பி
ததும்பும் வீடுகள்..
நதிகளில்
லாரிகளே ஓடுகிறது..
சாலை பள்ளங்களில்
நீர் தேங்க மழையுமில்லை.
குடத்தில்
நகராட்சி தண்ணீருமில்லை..
Advertisement
அதனால்
உன் கண்களில் முகம்பார்க்க
ஜன்னலில் நிலா..!