முகப்பு
கவிதைமணி

நெல்லுக்கிறைத்த நீர்: தாமோதரன் கபாலி 

Updated On : 5 செப்டம்பர், 2016 at 5:53 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:42 PM

நெல்லுக்கி றைத்த நீரால் நிலம்தழைத்து நிலைக்க வேண்டும்
சொல்லுக்கி டாக வாய்மை சுகப்படவே மகிழ வேண்டும்
புல்லுக்கி றையும் நீரின் புதிரொலியை அறிய வேண்டும்
கல்லுக்கி டும்நீர் தெய்வக் கனித்தமிழுக் கென்று போற்று!
வாழுபவரெல் லாமே  மக்கள் வாழ்த்தவேண்டும்  பேத மின்றி
சூழுபவரெல் லாமே  மக்கள் சூடவேண்டும் வளமை வாழ்வு
வீழ்பவரெல்  லாமே  மக்கள் வீழ்த்தவேண்டும் வளரும் தீமை
ஆழ்பவரெல்   லாமே மக்கள் ஆன்றோர்ச்சொல் பரவ வேண்டும்
மலைத்தனரே சிறுமைக் கண்டு மாசுடையோர் மதியின் வீக்கம்
குலைத்தனரே குறுகி வீணாய்க் குறையுற்றோர் விதியின் சாக்கு
அலைந்தனரே அருமை இன்றி அறிவுடைமைத் திறமும் இன்றி
கலைந்தனரே ஒருமை இன்றிக் காலத்தின் மேன்மை இன்றி!
நீரின்றி அமையா(து) வாழ்வு நிறமறந்துச் சமைப்போம் ஓர்மை
வேரின்றி வழங்கா(து) சாவும் விளைவிப்போம் ஒன்றாய்ச் சேர்ந்து
ஊரின்றி நிகழா(து) ஏற்றம் உழைத்திடுவோம் இணைய வாரீர்
பேரின்றி அடையா(து) ஊக்கம் பேர்ச்சொல்லும் பெருமைக் காண்போம்!
நெல்லுக்கி றைத்த நீராய் நிலம்போற்றி வாழ்வோம் நாமே!
சொல்லுக்கி டாக நின்றுத் தூய்மையாலே மகிழ்வோம் நாமே!
புல்லுக்கி றையும் நீராய்ப் பொலிந்திடவே அணைப்போம் நாமே!
கல்லுக்கி டும்நீர் தெய்வக் கனித்தமிழுக் கென்று கொள்வோம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.