முகப்பு
கவிதைமணி

நெல்லுக்குக் கிறைத்தநீர்: அதி. இராஜ்திலக்

Updated On : 5 செப்டம்பர், 2016 at 5:49 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:42 PM

கானலிலே நீரிறைக்க 
கமலைகளை கட்டிவைத்தோம்
காகிதத்தால் காளைச்செய்து
கன்றுமுதல் பழக்கிவைத்தோம்!
நெல்லுக்கு இறைத்த நீர்
நிலமின்னும் சேரலையே 
நெஞ்சத்தில் கருகிவிட்ட 
நிலைமைதான் மாறலையே!
விடுதலைக்கு  பின்னரும் 
வேதனைதான் வாழ்க்கையிலே  
சூடு சுரணை வித்தாகூட 
சோறாக தேறலையே !
ஊழலிங்கே உயிர்மூச்சு 
ஒற்றுமையோ போயாச்சு 
அடிமைகளால் பாட்டிசைக்கும் 
அவலம்தான் பெருகியாச்சு!
குடிநீரும் காசாச்சு 
குளங்களும்  மனையாச்சு 
ஆட்சிக்கு வந்தவர்களால் 
ஆறுயிங்கே மணலாச்சு!
நஞ்சையை கொண்டவர்கள் 
நஞ்சுண்டு செத்தாங்க 
புஞ்சையில் புதைக்க வைச்சு 
புழுயரிக்க போனோமுங்க!
புலம்பத்தான் தோணலிங்க 
பொங்கதான் வேணுமுங்க 
போதையை விட்டுவிட்டு 
புரட்சிக்கு வந்திடிடுங்க !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.