நெல்லுக் கிறைத்தநீர்: சாலை கிருஷ்ணமூர்த்தி நந்தகோபால்
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:42 PM
நெல்லுக் கிறைத்தநீர் நீள்வயல்
பாய்வதுபோல்
சொல்லும் மழையாலே சீராய்ப்
பொழிந்ததுவும்
நல்லார் ஒருவருக்காய் நன்மைசெயும் வானாக
வல்லார் வழங்கதந்த வாழ்த்து
நெல்லுப் பயிருக்குத் தேவையன்றோ நீர்பொசிவு
சொல்லுப் பயிர்விதைக்கச்
சொன்மழையைப் பாத்திகட்டிக்
காலம் துணைக்கொண்டு
காத்திருந்துத் தூற்றிகொள
ஞாலம் பயனுறவே நாடு