கவிதைமணி

நெல்லுக் கிறைத்த நீர்:முத்துலெட்சுமி

கவிதைமணி

இறையோடு ஒட்டாத எதுவும் 
இதயத்தோடு ஒட்டுவதில்லை
மண்ணோடு ஒட்டாத எதுவும் 
மனதோடு ஒட்டுவதில்லை
விண் உயர பறக்கும் கழுகு
திண்ணையில் தானியம் கொரிக்கும் 
சிட்டுக்குருவி போல் வருமா...
சிறுகுடிசைதான் என் வீடு
அதுக்காக பெரிய சிறை
சுகம் தருமா ???
உச்சிமலை மேகங்கள்
தூரல்கள் போடும்
ஊசிஇலை காடு உயரவளரும்
அதில் கனி வருமா
எந்தன் பனை தென்னை போல வருமா...
தேனீர் கடையில் நண்பர்களோடு தாளம் 
தட்டி வாழ்ந்த வாழ்க்கையை மீறி ஏதும் இல்லையே...
கடைக்கண் பார்வை பார்த்துவிட்டு 
அதில் ஆயிரம் அர்த்தம் சொல்லும்
மையிட்ட மான்விழி கண்கள் இங்கு எங்கும் இல்லையே...
இதைலெல்லாம் இனி காண முடியுமா ???
கூந்தலில் பின்னிய மல்லிகை ..
சுருக்கு வைத்து கட்டிய சேலை...
பாவாடை தாவணி எல்லாம்
யாரேனும் இங்கு கட்டிவந்தால்
மனம் அப்படியே ஆடிப்போகின்றதே...
வாடிய பயிருக்கு ஏற்றம்
இறைத்தநீர்
வந்துவிழுவதுபோல
ஊர்நிணைவுகள் மூடி நனைக்குதே
உயிர்வேரில் பசுமை
நிறையுதே...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருமணமான 8 மாதங்களில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை

கணவா் இறந்த சோகத்தில் மனைவி தூக்கிட்டுத் தற்கொலை

நியாயவிலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம் ’நாம்’ இயக்க மாநாட்டில் வலியுறுத்தல்

தில்லியில் காணாமல்போன 1,850 கைப்பேசிகள் மீட்பு

பழனியில் இரட்டை மாட்டுவண்டிப் பந்தயம்

SCROLL FOR NEXT