என் இலக்கு என் ஓட்டம்: அ.வேளாங்கண்ணி,
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:45 PM
எந்தத் தடையும் என்னைத் தீண்டாதுஎந்தன் லட்சியம் முன்னேஅதை துரத்தியபடி நான் பின்னேகால்களுக்கு முட்களின்வரவேற்பா..நீரில்லா பாலைவனமே பாதையா..காற்றிள்ள ஒருவெளி இடையிலா..எதற்கும் கவலையில்லை..அதோ அங்கே தூரத்தில் தெரிகிறதேஎனது லட்சியக் கனி..அதனை பறிக்கும் வரைக்கும்ஓய்வில்லை..அதோ அந்த வெற்றிக் கோட்டைதொட்டதும்நீங்கள் சொல்லவிருக்குஅறிவுரையை கேட்கிறேன்...அதோ அந்த வெற்றி நீரைஅறிந்தியதும்நீங்கள் தாகம் தணிக்க கொடுக்கஇருக்கும்பழரசத்தைக் குடித்துக்கொள்கிறேன்..அதுவரை எனது லட்சியம்எனது ஓட்டம்எனது வழி எப்போதும்அந்த இலக்கு நோக்கி மட்டும்...