என் ஓட்டம் என் இலக்கு: சாலை நந்தகோபால் கிருஷ்ணமூர்த்தி
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:45 PM
இதயம் சீராய் என்னில் ஓடுது
உதயம் கீதத்தை உவகை காணுது
நேரம் ஓடுது
தூரம் விரியுது
பொழுதும் விடியுது
நழுவி மறையுது
என்னுள் கனவை இயக்க
மன்னில் மலர வைக்கத்
திட்டம் நடத்தத் தீட்டி
ஓட்டம் எடுத்தே ஓடிச்
சட்டம் நன்றாய்ச் சமைத்துப்
பட்டம் பெறவும் பாதையை வெல்லவும்
இலக்கை எய்த ஏணியுமாய்
வலக்கை ஆக இருந்ததென் ஓட்டமே!