முகப்பு
கவிதைமணி

என் ஓட்டம் என் இலக்கு:  லூர்து எஸ் ராஜ்  

Updated On : 12 செப்டம்பர், 2016 at 5:05 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:45 PM

உழவர் ஓட்டம் உழைப்பென்றால்
ஒருபோகம்  விளைச்சல் இலக்காகும்
அறிஞர் ஓட்டம் ஆய்வென்றால்
அறிவியல் ஆக்கம்  இலக்காகும் 

ஞானியர் ஓட்டம் தியானமென்றால்
ஞால முன்னேற்றம் இலக்காகும்
மாணவர் ஓட்டம் படிப்பென்றால்
மாண்புறு கல்வியே இலக்காகும்

காதலர் ஓட்டம் நேயமென்றால்
கடிமணம் புரிதலே இலக்காகும்
அணுவணுவாக முயன்று முன்னேறி
ஆமைபோல் இலக்கை அடைவோரே
அவனியில் என்றும் வெல்வாராம்.

முயலைப் போன்று அயர்ந்து தூங்கி
இலக்கு  மறந்து போவோர்க்கு
என்றும் வெற்றி ஆக்கமிலை .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.