தண்ணீருக்கு இரத்தம்: மா.செந்தில்வேலன்,
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:48 PM
அன்று தண்ணீர் நன்னீரானது இன்று
தண்ணீர் செந்நீராகிறது
தண்ணீரை பகிரமனித மனம் மறுக்கிறது
ஆனால் தண்ணீர் மனிதன் பகிர நினைக்கிறது
கரை புரண்டு ஓடும் ஆற்று நீர்
காடு கழனியெல்லாம்
ஆர்ப்பரித்து ஓடி வர மாறி வரும்
மானாவரியான பூமியெல்லாம் மழையை
நம்பி இருக்க காலம் மாறினாலும் காட்சிகள்
மாறினாலும் காவேரி மாறவில்லை
அதை காணும் மனிதன் மனம்தான்
மெல்ல மாறுகிறது
குடகு மலை மைந்தன் கை கூப்பி கூறினான்
மனிதனை கூடி வாழ குறைகள்
எல்லாம் நீங்கி விடும்
பகிர்ந்து வாழ் பாரெல்லாம் போற்றிடும்
தன்னம்பிக்கையோடு வாழ் தன்னிகரில்லா
நிலையை அடையலாம்