நீதியைத்தேடி : அருள் .க. இராபர்ட்
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:50 PM
தேரா மன்னனை தேறிட வைத்து
தெளிந்தது ஓர் காலம்
போராடாமல் நடுமணி அடித்து
பெற்றது ஓர் காலம்
புறாவுக்காக தொடைக்கறி கொடுத்து
பூரித்ததோர் காலம்
கரவாது நிறைவாய் மக்களிடையே
கனிந்தது ஓர் காலம்
காசும் பணமும் கையில் இருப்போர்
களித்திடும் இக்காலம்
பேசும்பரிசும் பதவியும் நிதியும்
பேரமும் இக்காலம்
நீசர் கைகளில் ஆட்சி இருப்பதால்
நீதியைக் காணவில்லை
தேசத்தின் வீதியில் நீதியைத் தேடி
Advertisement
திகைக்கிறோம் இக்காலம்