கவிதைமணி

பச்சை நிலம்: எஸ்.வேதஜனனி சுரேஷ்

கவிதைமணி

பாரெங்கும் தவறாது கார் பொழிந்திட்டால்
பார்க்கும் நிலமெல்லாம் பச்சைநிலம்தான்!
பச்சைப் பட்டுடுத்தி பார்ப்போரை ஈர்த்திடுவாள் நிலமகள்!

கண்ணுக்கு குளிர்ச்சி தரும் பச்சை வயல் கழனிகள்
மனதுக்கு மகிழ்ச்சி தரும் அதில் உலவும் பறவைகள்!
ஒங்கி செழித்து வளர்ந்திடும் மரங்கள்
உடையாய் அணிந்திட்ட இலைகள் தோறும் பச்சை நிறம்!
தடையாக மனிதனும் காரணம்!

மாசு தறும் ஆலைகள் பெறுகிட
விளைநிலமெல்லாம் விலைநிலமாக்கி
விற்றிட்டால் விளைந்திடுமோ பசுமை?
ஆற்றுக்கு அணைபோட்டு காற்றுக்கு தடைபோட்டு
ஊற்றினையே உறிஞ்சிட்டால்
உலர்ந்து போகாதோ பச்சை நிலம்!

காய்ந்திட்ட வயல்கள் தோறும் கான்கிரிட் கட்டிடங்கள்!
கலர் கலராய் தோரணங்கள்!
விவசாயம் மறைந்து போக
வெறும் சாயம் ஆகிப்போனது பச்சை நிலம்!
பசுமைஎல்லாம் மறைந்து போக
மனச்சுமையோடு பயணிக்கிறது காலம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மிகவும் அழுத்தம் நிறைந்த போட்டியில் விளையாடவுள்ளோம்; இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர்!

ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் வெடித்த மோதல்: ஜம்மு காஷ்மீர் கேப்டனுக்கு 50% அபராதம்?

தேவா குரலில் வெளியான ஜெய்யின் புதிய படத்தின் பாடல்! இணையத்தில் வைரல்!

காலையில் எழுந்தவுடன் இந்த 5 விஷயங்களைச் செய்யுங்கள்!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!

SCROLL FOR NEXT