கவிதைமணி

 பச்சை நிலம்: கலியமூர்த்தி

கவிதைமணி

பச்சை எடுத்திருக்கிறது
எதிர்சாரி புங்கை மரம்..

பச்சையும் சிவப்புமேறி வர்ணஜாலம்
காட்டும் நிலம் பார்த்திறங்கும் கிளைகளில்

இறகு உலர்த்திக்கொண்டிருக்கின்றன
பெயர்தெரியாக் குருவிகள்..

அவற்றின் திடீர் பறத்தலில் திரண்டிருக்கும்
நீர்த்துளி புழுதிகரைத்து கீழிறங்குகிறது..

மனித மனங்களின் விகாரம் கலைத்திடத்
தேவைப்படும் பெருஞ்சண்டை போலவோ,
பெருமவுனம் போலவோ, பெருமழையொன்று
எப்போதும் தேவையாயிருக்கிறது
அழுக்கு கரைக்க.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சட்டப்பேரவையில் பி.எஸ். குமாரசாமி ராஜா படம் திறக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

பிளவக்கல் அணை பூங்கா சீரமைப்பு பணிக்கு ஒப்பந்தப்புள்ளி வெளியீடு

ஜெயலலிதா பிறந்த நாள் விழா

பெண்ணிடம் தகராறு: நிதி நிறுவன மேலாளா் கைது

இளைஞரைத் தாக்கிய வழக்கில் 5 பேருக்கு 6 மாதம் சிறை

SCROLL FOR NEXT