பச்சைநிலம் இந்நாளில் பாழ்ங்காடாய்ப் போனதற்கு
இச்சைமிகக் கொண்டார் இழிசெயலாம் -----சிச்சீசீ
அச்சமின்றி அத்தகைய தீயவரைக் கண்டால்நீ
எச்சிலைக் காறி உமிழ்.
உச்சந் தலைமுதலாய் உள்ளங்கால் ஈறாக
நச்செனச் சுட்டெரிக்கும் நாள்வெயிலில் -----அச்சச்சோ
ஓயா(து) உழைக்கும் உழவர் அருஞ்செயலால்
நாவார உண்கின்றோம் நாம்.
பெற்ற குழந்தைபோல் பேணிவந்த பச்சைநிலம்
வெற்றுத் தரிசாகும் வேதனையால் -----கற்றா
மனம்போல் கசிந்துருகும் மண்ணின் உழவர்
இனம்கண்டு கைகொடுப்பீர் இன்று.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.