கவிதைமணி

பச்சை நிலம்: வ.க.பரமநாதன்

கவிதைமணி

கொட்டும்ம ழைகண்டே ஏர்பிடித் தேயுழும்
கூட்டத்தைப் பார்த்திட வாருங்க டா!
வாட்டும்ப சிக்குண வீய்ந்திடும் வித்தையை
வந்திரு கண்களால் காணுங்க டா!

பச்சைவ யல்களில் நெல்மணி யாடிடப்
பட்டுடல் வீசிடும் தென்றல டா!
இச்சையைத் தந்திடும் நெஞ்சினை யள்ளிடும்
என்பதைக் காணவே சேருங்க டா!

எத்தனை பேரிடர் பச்சைநி லத்திற்கு
இங்கில்லைப் போதிய தண்ணீர டா
செத்திடும் எம்விவ சாயிகள் எண்னிக்கை
சிந்திக்க வேண்டுமாம் ஆட்சிய டா!

பச்சைநி லப்பூமி யாமதோ கண்முன்னே
பாழ்பட்டுத் தானிங்கே போகுத டா!
மிச்சநி லம்கூட நாளைதொ லையுமோ
மெத்தப்ப யத்தினைச் சேர்க்குத டா!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சட்டப்பேரவையில் பி.எஸ். குமாரசாமி ராஜா படம் திறக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

பிளவக்கல் அணை பூங்கா சீரமைப்பு பணிக்கு ஒப்பந்தப்புள்ளி வெளியீடு

ஜெயலலிதா பிறந்த நாள் விழா

பெண்ணிடம் தகராறு: நிதி நிறுவன மேலாளா் கைது

இளைஞரைத் தாக்கிய வழக்கில் 5 பேருக்கு 6 மாதம் சிறை

SCROLL FOR NEXT