கவிதைமணி

கைகோர்ப்போம்:  கு.முருகேசன்

கவிதைமணி

விழியற்றோர்க்கு வழி காட்ட
கைகொடுப்போம்!
விவசாயம் காக்க
கைகோர்ப்போம்!

கைகோர்ப்போம்
களையெடுக்க!
களவைத் தடுக்க!
களவாணிகளை ஒடுக்க!

கைகொடுப்போம்
பள்ளத்தில் உள்ளவரை தூக்க!
பள்ளத்தில் தள்ளுவோரை தாக்க!
பஞ்சத்தில் தவிப்போரைக் காக்க!

கையூட்டு பெறும் கைகளுக்கு
கைவிலங்கு போட
ஊழல் பெருச்சாளிகளுக்கு
உலை வைக்க
கைகோர்ப்போம்!

விவசாயம் செய்வோர்க்கு
கைகொடுப்போம்!
விவசாயத்தை காப்பாற்ற
கைகோர்ப்போம்!

வறுமையை நீக்க! வளமையை காக்க!
இயற்கையை காக்க! ஏழ்மையை போக்க!
சாராயம் தடுக்க! சமத்துவம் நிலைக்க!
சாமனியனோடு கைகோர்ப்போம்!

கருத்தை கோர்த்தால்
கட்டுரை படைப்போம்!
கைகளைக் கோர்த்தால்
சரித்திரம் படைப்போம்!

பூக்களை கோர்த்தால் பூமாலை!
பாக்களை கோர்த்தால் பாமாலை!
இதயங்களை கோர்த்தால் மணமாலை!
இளைஞர்களை கோர்த்தல் வெற்றிமாலை!

உரிமைக்கு குரல் கொடுப்போம்!
உறவுக்கு கைகொடுப்போம்!
நட்புக்கு தோள்கொடுப்போம்!
நாட்டுக்கு நம்மையே கொடுப்போம்!

உழைப்போர்க்கு கம்பளம் விரிப்போம்!
சம்பளம் கொடுப்போம்!
ஊரை ஏமாற்றி பிழைப்போர்க்கு
கைவிரிப்போம்!

நீதிக்கு குரல் கொடுப்போம்!
நிம்மதிக்கு வழி வகுப்போம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சட்டப்பேரவையில் பி.எஸ். குமாரசாமி ராஜா படம் திறக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

பிளவக்கல் அணை பூங்கா சீரமைப்பு பணிக்கு ஒப்பந்தப்புள்ளி வெளியீடு

ஜெயலலிதா பிறந்த நாள் விழா

பெண்ணிடம் தகராறு: நிதி நிறுவன மேலாளா் கைது

இளைஞரைத் தாக்கிய வழக்கில் 5 பேருக்கு 6 மாதம் சிறை

SCROLL FOR NEXT